Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்இளம் தாய் சிந்துஜாவின் மரண விசாரணையில் பொலிஸார் அசமந்தம்

இளம் தாய் சிந்துஜாவின் மரண விசாரணையில் பொலிஸார் அசமந்தம்

மன்னார் கட்டையடம்பன் பகுதியை சேர்ந்த இளம் தாய் சிந்துஜா, மன்னார் வைத்தியசாலையில் உயிரிழந்தார்

இந்நிலையில், இளம் தாயின் மரணம் தொடர்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்தனர்

பெற்றோரின் முறைப்பாடுக்கு அமைவாக பொலிஸாரால் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக நம்பப்பட்டு வந்த போதும் விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்றுள்ளமை நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.

சிந்துஜாவின் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று (19) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்ட்ட போது குறித்த வழக்கு மன்னார் பிராந்திய குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மன்னார் குற்றத்தடுப்பு பொலிஸார் மன்றில் தெரிவித்திருந்தனர்.

மன்னார் மடு பொலிஸார் குறித்த வழக்கு விசாரணையை டீ வழக்காக பதிவு செய்யாது சாதாரண வழக்காக பதிவு செய்து விசாரணைகளை நடத்தியமை நீதிமனத்திற்கு தெரியவந்துள்ளது

மரணித்த பெண் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரனிகளின் கோரிக்கையை ஏற்று குறித்த வழக்கு தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தி இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை சமர்பிக்குமாறு நீதிபதி உத்தரவுட்டுள்ளாhர்
அடுத்த வழக்கு மேலதிக விசாரணைக்காக டிசம்பர் மாதம் 03 திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments