Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் மரணம். உறவினர்கள் போராட்டம்

மன்னாரில் பிரசவத்தின் போது இளம் தாய் மரணம். உறவினர்கள் போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணித் தாயும் சேயும் மரணமடைந்துள்ளதால் உறவினர்கள் உடலை வாங்க மறுத்துள்ளனர்

மன்னார் பட்டித்தோட்டம் பகுதியை சேர்ந்த 28 வயதான வனஜா என்ற இளம் தாயே நேற்று (19) மன்னார் வைத்தியசாலையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

சிசேரியன் செய்ய வைத்தியர்கள் மறுத்ததுடன் இயற்கை முறையில் குழந்தையைப் பிரசவிக்க முயற்சி செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் கவனயீனத்தாலேயே இளம் பெண் மரணமடைய நேரிட்டது என உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் வைத்தியசாலை மீது குற்றம் சுமத்தியுள்ளனர்

அவர் மரணம் அடைந்த விடயத்தை கூட நீண்ட நேரமாக தமக்குத் தெரிவிக்கவில்லை எனவும், கர்ப்பிணியின் உடலைப் பார்ப்பதற்குக் கூட பெற்றோரை வைத்தியசாலை ஊழியர்கள் அனுமதிக்கவில்லை எனவும் மரணித்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

மரணத்துக்கு உண்மையான காரணம் என்ன என தெரிவிக்கும் வரை அவரது உடலை பெற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்

அத்துடன் தமக்கு நீதி கிடைக்கும் வரை வைத்தியசாலையை விட்டு நகரப்போவதில்லை எனத் தெரிவித்து போராட்டத்திலும் ஈடுபட்டுளள்னர்

 

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments