பெண் ஒருவரை கொலை செய்து விட்டு மற்றுமொரு பெண்ணை படுகாயமடையச் செய்தவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
அனுராதபுரம் மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சம்பவம் நடைபெற்றுள்ளது
35 வயதுடைய பெண் ஒருவரும் 30 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்த பெண்ணுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட காம உறவின் காரணமாகவே இந்தக் கொலையும் தற்கொலையும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
காயமடைந்த பெண் அனுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.