இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு நிறுத்துவதற்கான அழுத்தங்களையும இயலுமான வழிகளில் எல்லாம் போராடவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
சர்வதேச விசாரணையை நடத்தக்கூடிய பொறிமுறைகள் உள்ள அனைத்து அரங்குகளில் அநுர தலைமையிலான அரச இயந்திரத்தை நிறுத்தக்கூடிய சாத்தியமான வழிகளில் எங்களுடைய பயணம் இன்னும் தீவிரம் அடையும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார்
இன்று (19) முள்ளிவாய்க்காலில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் மற்றும் முள்ளிவாய்க்கால் நினைவு தூபிக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தி சத்தியப்பிரமாணமசெய்த பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
5 வருடங்களுக்குள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆழமாக சிந்தித்து தமிழ் தேசத்தினுடைய இன அழிப்பினுடைய, அடையாளமாக இருக்கக்கூடிய முள்ளிவாய்க்கால் மண்ணிலே சத்திய பிரமாணம் எடுக்கின்ற நோக்கத்தோடு முள்ளிவாய்க்காலுக்கு வந்திருக்கின்றோம்.
இன்று தென்னிலங்கையிலே ஒரு மாற்றம் நடைபெற்று இருக்கின்றது
அதிலும் யாழ்ப்பாணத்திலே தென் இலங்கையிலே நடைபெற்ற மாற்றத்தை போன்று யாழ்ப்பாணத்திலே ஒரு மாற்றம் நடைபெற்றதாக கூறி இன்று தமிழ் மக்கள் ஒற்றையாட்சியை ஏற்றுக் கொண்டு விட்டார்கள் என கருதுகின்றார்கள்
கடந்த 15 வருடமாக எங்களுடைய கொள்கைகளையும், மக்களுடைய அபிலாசைகளையும் விட்டுக் கொடுக்காமல் தொடர்ச்சியாக செயற்பட்டு வந்திருக்கின்றோம்.
தொடர்ந்தும் அவ்வாறே செயற்படுவோம்
மாவீரர்களும், எமது பொதுமக்களும் உயிர்த்தியாகம் செய்தமை வீண் போகாமல் இருப்பதற்கு நாங்கள் நிச்சயம் போராடுவோம்
கடந்த 15 வருடங்களாக எமது அரசியல் இயக்கம் முள்ளிவாய்க்காலில் நிறைவேறிய தமிழின படுகொலைக்கு, ஒரு சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை உறுதியாக வலியுறுத்தி வந்திருக்கின்றோம்.
ஐநா மனித உரிமை பேரவையிலேயே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடைய பலவீனங்களை நாங்கள் மக்களுக்கும் சர்வதேச மட்டத்திலும் எடுத்துக்காட்டி இருக்கின்றோம்.
அதனுடைய இயலாமையை நாங்கள் கடந்த 15 வருடங்களாக அனுபவித்து வந்திருக்கின்றோம்.
இதுவரைக்கும் தமிழ் மக்களுடைய இனப்படுகொலைக்குரிய குற்றவியல் விசாரணைகள் எதுவும் நடைபெறாமல் இலங்கை அரசாங்கத்துக்கும் தன்னுடைய இராணுவத்திற்கும், முப்படைகளுக்கும் ஒரு கால அவகாசத்தினை தான் 15 வருடங்கள் அமைந்திருந்தது என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கவலை வெளியிட்டுள்ளாhர்