வவுனியா – ஆண்டியாபுளியன்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 59 வயதுடைய குடும்பஸ்த்தர் உயிரிழந்துள்ளார்
மின்சார தாக்கியதையடுத்து உறவினர்கள் அவரை உடனடியாக செட்டிக்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் அவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.