தமிழ் மக்களின் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்ல தமிழரசுக் கட்சி தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் அரசியல் குழுக்கூட்டம் வவுனியா ஈரற்பெரியகுளத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைப்பபெற்ற அவர் இவ்வாறு தெதரிவித்துள்ளார்.
கருத்தியல் ரீதியான வேறுபாடுகளை களைந்து வன்னி மாவட்டங்களுக்கு ஏற்ப்பட்டுள்ள வெற்றிடங்களை கருத்தில்கொண்டு தேசியபட்டியல் ஆசனத்தை வைத்தியர் சத்தியலிங்கத்திற்கு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்ட்டுள்ளது
2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் நோக்கம் மற்றும் இலக்கின் அடிப்படையில் அனைவரையும் அரவணைத்துச் செல்வதற்கு தமிழரசு கட்சி தயாராக உள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்
நான் தமிழரசுக்கட்சியின் தெரிவு செய்யப்பட்ட தலைவர்.
நீதிமன்ற தடையுத்தரவு நீக்கப்பட்டால் நான் தலைவராக செயற்படுவேன்.
அதற்கான காலம் கனிந்துகொண்டிருப்பதாக உணர்வதாக சிறிதரன் மேலும் தெரிவித்துள்ளார்