யாழ் மற்றும் மன்னார் பிரதான வீதி பெரியமடு கொமான்டோ ராணுவ பயிற்சி முகாமில் 500 இற்கும் மேற்பட்ட ராணுவத்தினரை தனிமைபடுத்தி உள்ளதாக தெரிய வருகிறது.
குறித்த பயிற்சி முகாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்ட ராணுவத்தினர் சிலருக்கு சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது அவர்கள் மூளைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.
இதனை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் அஸாத் எம் ஹனீபா உறுதி படுத்தியுள்ளார்