தமிழ் மக்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மீதும், தேசிய மக்கள் சக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை நிட்சம் நிறைவேற்றப்படும்
தேசிய மக்கள் சக்தி, வடகிழக்கில் பெற்றுள்ள வெற்றி தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடகிழக்கு வெற்றி தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதி தேர்தலின்போது, ரணிலும் ; சஜித்தும் தேசிய மக்கள் சக்தியை தமிழ் மக்களின் எதிரிகளாக சித்தரித்து பிரச்சாரம் செய்தார்கள்.
இதனால் தமிழ் மக்களுக்கு சந்தேகங்கள் இருந்தன.
ஆகவே யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் 25ஆயிரத்துக்கு உட்பட்டதாகவே வாக்குகளை கிடைத்தன
;ஜனாதிபதி தேர்தலின் பின்னரான 45 நாட்களில் ஜனாதிபதி அநுரகுமாரவின் செயற்பாட்டை மக்கள் நேரடியாகவே பார்த்த காரணத்தால் ஜனாதிபதி தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டார்கள்
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்றாடம் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கின்றார்கள்.
போதைப்பொருள் பாவனைக்கு இளையோர் அடிமையாதல் உள்ளிட்ட நெருக்கடிகள் பல உள்ளன.
அந்தப்பிரச்சினைகளை கூட தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றவர்கள் சரியாகக் கையாளப்படவில்iயென சந்திரசேகரன் மேலும் தெரிவித்து;ளளார்.
ஜனாதிபதி அநுரகுமார மீதும் தேசிய மக்கள் சக்தி மீதும் தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை பாதுகாக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.