அநுர அரசுக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியானது ஆழமான சீர்திருத்தங்களிற்கான ஆணையை வழங்குகின்றது என இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகப்பதிவில் அவர் இலங்கை தொடர்பில் சில விடயங்களை வெளியிட்டுள்ளார்
இடதுசாரி கூட்டணியின் தலைவர் இலங்கையில் முழுமையான அனேகமாக அனைத்து தொகுதிகளிலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இது இலங்கைக்கு வலுவான புதிய ஆட்சியை மக்கள் விரும்புகின்றார் என்பதனை காட்டுகின்றது
புதிய அரசு செய்ய வேண்டியது
1. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் ஒரு ஒப்பந்தத்திற்காக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளல்
2. வறுமையில் சிக்கியுள்ளவர்களை அதன் பிடியிலிருந்து மீட்பதற்கான பொருளாதார சீர்திருத்தம் அவசியமானது
3. தேசிய நல்லிணக்கத்தையுமு; சிறுபான்மை மக்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்
4. ஊழலிற்கு எதிராக கடுமையான போராட்டம்
5. சுற்றுலாத்துறையில் பசுமை பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும்
என அவர் சில விடயங்களை பட்டியல் இட்டுள்ளா