தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.
அவர் இன்று சனிக்கிழமை (16) விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்
கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு நெருக்கடிக்குள் தமிழினம் சிக்கித் தவிக்கிறது.
மாறி மாறி ஆட்சிக்கு வரும் ஆடசியாளர்கள் திட்டமிடப்பட்ட இன அழிப்பை தொடர்ச்சியாக மென் வலுவில் நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
சிங்கள பேரினவாதம் அவ்வாறு செயற்படுகின்ற Nபுhது தமிழர் தரப்பு பிரிந்து நின்று அதனை எதிர்கொள்வது சாத்தியமில்லாத ஒன்று ஆகும்
தமிழ்க்கட்சிகளின் தலைவர்கள் பதவி சண்டையால் தங்களுக்குள் முரண்பட்டு பல அணிகளாக பிரிவடைந்துள்ளனர்.
தமக்குள்ளான முரண்பாடு பொது எதிரியை மகிழ்விக்கும்;
இந்த தேர்தல் களம் தமிழ்க் கட்சிகள் தமது முரண்பாட்டையே பேசு பொருளாக்கியது.
இதனால் வெறுப்படைந்த பொதுமக்கள் தமிழ்த்தேசிய கோட்பாட்டுச் சித்தாந்தத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
தமிழ் கட்சிகளிலும் பல்வேறு விதமான தவறுகளும், குறைபாடுகளும் காணப்படுகின்றன.
வடக்கு மாகாண தேர்தல் களம் பல்வேறு விதமான சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
கிழக்கு மக்கள் விழித்துக் கொண்டதால் தம்மை தற்காத்துக் கொண்டனர்.
எனவே தமிழ்த்தேசிய கட்சிகள் தமக்குள் இருக்கின்ற பகைமையை மறந்து குறைந்தபட்சம் ஒன்றாக இணைந்து மீண்டும் கூட்டமைப்பாக இயங்க வேண்டியது காலத்தின் கட்டாயமும் நிர்ப்பந்தமும் ஆகும் என தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.