தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற தேர்தலில் முன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அதிகமாக வெற்றிப் பெற்றதையடுத்து ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் மக்களுக்கு நன்றி தெரிவித்து பதிவேற்றம் செய்துள்ளார்.
பொதுத்தேர்தல் வெற்றியையும் அமைதியான முறையில் கொண்டாடுமாறு ஜனாதிபதி, வலியுறுத்தியுள்ளார்
எந்த வகையான வெற்றியையும் அமைதியாக கொண்டாடும் கலாசாரம் நாட்டு மக்களிடம் வளர்க்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களை வென்றுள்ள நிலையில் மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்க தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்