கிளிநொச்சியின் பல பிரதேசங்களில்; சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்ந்து இடம்பெறுகின்றது என கிளிநொச்சி வாழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்
சட்டவிரோத மணல் அகழ்வினால் பெறுமதியான வயல் நிலங்கள் உள்ளிட்ட தனியார் காணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது.
மணல் கொள்ளையர்கள் இரவு நேரங்களில் விவசாயம் செய்யும் மக்களுக்கு சொந்தமான காணிகளிலும் மணல் கொள்ளையில் ஈடுபடுகின்றனர்
மணல் அகழ்வில் ஈடுப்படுகின்றவர்கள் கிளிநொச்சி பொலீஸாருடன் நல்ல உறவில் இருப்பதனால் மணல் கொள்ளையர்களுக்கு எதிராக பொலீஸார் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்