சுன்னாகத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தின் பின்னர் பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புடைய வானிலிருந்தவளை தாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது
வானில் குழந்தையுடன் இருந்த இளம் தாய் உட்பட வானிலிருந்த பெண்களையும் ஆண்களையும் ஓட்டோவில் ஏற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றதுடன் அங்கேயும் ஆண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
சுன்னாகம் பொலீஸ் நிலையம் சென்ற கஜேந்திரகுமார் பொனானம்பலம் செல்வராஜா கஜேந்திரன் நடராஜர் காண்டீபன் ஆகியோர் பொலீஸாhருடன் கதைத்து தாக்குதலுக்கு உட்பட்டவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்
பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து வானில் வந்தவர்களை பொலிஸார் தாக்கியதனை பொலிஸ் பொறுப்பதிகாரி ஏற்றுக்கொண்டதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்
விபத்து நடைப்பெற்ற பிரதேசத்தில் உள்ள சிசிடிவி கமராக்கள் ஊடாக நடந்த முழு சம்பவத்தையும் அறிவதற்கான வாய்ப்புள்ளது என அங்குள்ள மக்களின் கருத்துக்களின் மூலம் அறிய முடிகின்றது