தமிழ்மக்களின் வாக்குகளை வேட்டையாட முஸ்லீம் அரசியல்வாதிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ள சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்
வவுனியாவில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
கடந்த 15வருட அரசியலில் முஸ்லீம் அரசியல்வாதிகள் களநிலவரங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்தி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரிக்கின்றார்கள் என சுயேட்சை வேட்பாளர் எமில்காந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களை விட குறைவான வாக்குகளை கொண்டுள்ள முஸ்லீம்கள் தமது அரசியல் தேவையை தமிழ்மக்களின் மீது பயணம் செய்தே பெற்றுக்கொள்கின்றனர்.
வன்னியில் அனைத்து துறைகளிலும் தமிழ்மக்கள் பலங்குன்றியே உள்ளனர்.
வவுனியா நகரத்தின் பொருளாதாரகட்டமைப்பும் ஆதிக்கமும் முஸ்லீம்களின் கைகளில் உள்ளதாக எமில்காந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்
இம்முறையும் முஸ்லீம் அரசியல்வாதிகள் இரண்டிற்கும் மேற்ப்பட்ட உறுப்பினர்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நுட்பமான முறையில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக எமில்காந்தன் மேலும் தெரிவித்துள்ளார்