நாறி மலை ஆதி சிவன் ஆலயம் தொடர்பிலான விசாரணைக்கு வருமாறு ஆலயத்தின் முன்னாள் உறுப்பினர்கள் இரண்டு பேரை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் (TID) விசாரணைக்கு வருமாறு அழைத்துள்ளதாக தெரியவருகின்றது.
ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் மற்றும் முன்னாள் செயலாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை இன்று (9) வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்
ஆலயத்தின் முன்னாள் தலைவர் சசிகுமார் முன்னாள் போராளி என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகுமாரின் புனர்வாழ்வு பெற்றே விடுதலையானவர்.
புனர்வாழ்வு விடுதலையின் போது வழங்கப்படும் சகல ஆவணங்களையும் விசாரணைக்கு வரும் போது எடுத்து வருமாறு பயங்கரவாத தடுப்பு புலனாய்வு திணைக்களத்தினால் தொலைபேசி ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது