Wednesday, January 15, 2025
Homeசெய்திகள்இலக்கத் தகடற்ற மற்றுமொரு சொகுசு வாகனத்தை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

இலக்கத் தகடற்ற மற்றுமொரு சொகுசு வாகனத்தை பொலிஸார் கையகப்படுத்தியுள்ளனர்.

நீர்கொழும்பில் இலக்கத் தகடு இல்லாத சொகுசு வாகனம் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு தகவ்ல கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த பகுதியை புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்து தேடிய போது சொகுசு வாகனம் கைப்பற்றப்பட்டுள்ளது

.
வெளிநாட்டில் உள்ள தனது சகோதரன் குறித்த சொகுசு வாகனத்தை தனக்கு அனுப்பி வைத்ததாக சொகுசு வாகனத்தின் உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

பொலிஸாரின் விசாரணையில் இந்த சொகுசு வாகனம் பிரபல வர்த்தகர் ஒருவரினால் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

வானம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நீர்கொழும்பு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments

What do you like about this page?

0 / 400