ரெலோ அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக தலைமை பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என ரெலோவின் நிர்வாக செயலாளரும் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான விந்தன் கனகரட்ணம் வேண்டுகோள் விடுத்துள்ளாhர்
யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார
இது தொடர்பில் அவர் கருத்திடுகையில்
பல குற்றவியல் வழக்குகளோடு தொடர்புடையவரும் தமிழ் தேசியத்திற்கு எதிரான செயல்களை செய்கின்றவர்களும் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடுகின்றார் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
டெலோ சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்pல் போட்டியிடும் குறித்த வேட்பாளரின் குற்ற பின்னணியின் ஆவணங்களை வெளியிட நான் தயாராக இருக்கின்றேன் என விந்தன் கனகரட்ணம் குறிப்பிட்டுள்ளார்
குறித்த நபரை கட்சிக்குள் கொண்டு வந்து , வேட்பாளர் ஆக்கியவர் செல்வம் அடைக்கலநாதன் என விந்தன் கனகரட்ணம் மேலும் தெரிவித்துள்ளார்
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுக்கட்டமைப்பாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அனைவரும் வேலை செய்த போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் பெரும் தொகை பணத்தினை பெற்றுக்ககொண்டு அவருக்கு செல்வம் அடைக்கலநாதன் வேலை செய்ததாக அவர் மேலும் தெரிவித்துளளார்
டொலோ அமைப்பிலிருந்து சிறிகாந்தா , சிவாஜிலிங்கம்; , உதயராசா உள்ளிட்டோர் விலகுவதற்கு காரணமான செல்வம் அடைக்கலநாதன் உடனடியாக பதவி விலக வேண்டும் என விந்தன் கனகரட்ணம் வேண்டுகொள் விடுத்துள்ளார்