மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்தாறுமூலை – உப்போடை பகுதியில் மின்னல் தாக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் வந்தாறுமூலை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் உட்பட இருவர் துவிச்சக்கர வண்டியில் பயணித்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபரின் உடல்; பிரேதப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.