நாடாளுமன்ற தேர்தலில் தேர்தலில் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற போதிலும் 1000 ற்கும் குறைவான வேட்பாளர்களே தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளார் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த நிலையானது மக்களுக்கு அரசியல் ஈடுபாடு குறைவடைந்துள்ளதை காட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலில் ஈடுபடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பொதுமக்களின் சிந்தனையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாராம்பரிய கட்சிகளின் மீது மக்களுக்கு அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாக ரோஹண ஹெட்டியாராச்சி சுட்டிக்காட்டியுள்ளார்
கடந்த கால பொது தேர்தலின் போது வாக்கு வேட்டைக்காக கட்சி 6 இலட்சம் கட்சி அலுவலகங்கள் அமைக்கப்படுவது வழக்கம் எனவும் ஆனால் இம் முறை 9241 கட்சி அலுவலகங்களே இயங்குகின்றன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.