வவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சடலம் ஒன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் தலவாக்கலை பகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, தடவியல் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சம்பவ இடத்திற்கு சென்ற பதில் நீதிவான் தி.திருவருள் சடலத்தினை பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.