நவம்பர் மாதத்தின் முதல் ஐந்து நாட்களில் மட்டும் 30 ஆயிரத்து 620 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்தியாவில் இருந்து மட்டும் 7785 சுற்றுலாப் பயணிகளும்,ரஷ்யாவிலிருந்து 4,488 சுற்றுலாப் பயணிகளும், ஜெர்மனியிலிருந்து 2,752 சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 1,821 சுற்றுலாப் பயணிகளும், அவுஸ்திரேலியாவிலிருந்து 1,227 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 1,076 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர்.
நடப்பு ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் 16 ஓரு இலட்சத்து 51 ஆயிரத்து 335 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.