Tuesday, December 24, 2024
Homeஉள்ளூர்மன்னார் சதோச மனித புதைகுழி 'ஸ்கேன்' செய்ப்படுகின்றது! செய்தி அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை

மன்னார் சதோச மனித புதைகுழி ‘ஸ்கேன்’ செய்ப்படுகின்றது! செய்தி அறிக்கையிட ஊடகங்களுக்கு தடை

நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மன்னார் நகரின் சதோச மனித புதைகுழி அகழ்வு பணியானது மீண்டும் இவ்வாரம் நடைபெறவுள்ளது

இதன்; முதற்கட்டமாக தடய பொருட்களை பிரித்தெடுக்கும் நடவடிக்கையும் மனித புதைகுழியை அண்டிய பகுதியை ஸ்கேன் செய்யும் வேலைத் திட்டமும் நடைபெற்று வருகின்றது.

மன்னார் சதோச வளாகத்திற்கு அருகில் படையினர் முகாமிட்டிருந்த கூட்டுறவு சங்க கட்டிடம் அமைந்துள்ள பகுதியிலும் இன்று அகழ்வு பணிகள் (07) நடைபெறுகின்றது வருகின்றது.

ஆயினும் அகழ்வு பணியையோ அல்லது ஸ்கான் செய்யப்படுவதனையோ ஒளிப்படம் எடுக்கவோ, காணொளி பதிவு செய்யவோ ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்டவில்லையென்பது குறிப்பிடத்தக்கது

ஏலவே சதோச மனித புதைகுழி அகழ்வு பணி தொடர்பில் செய்தி சேகரிக்க பொலிஸாரால் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மன்னார் நீதவான் நீதிமன்றமானது அகழ்வு பணி தொடர்பான உண்மையான விடயங்களை அறிக்கையிட ஊடகங்களுக்கு அனுமதி வழங்கியிருந்தது

ஆயினும் தற்போது பணிக்கமர்த்தப்பட்டுள்ள புதிய நீதிபதி மனித புதைகுழி தொடர்பிலான விடய பரப்பினை கணொளியாகவோ ஒளிப்படமாக ஆவணப்படுத்தவோ செய்தி அறிக்கையிடுவதற்கோ அனுமதி மறுத்துள்ளார்

மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பாக ஆஜராகும் சட்டத்தரணிகளும் ஊடகங்களுக்கு குரல் கொடுக்க மறுத்துள்ளர்

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments