இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
எபிக் லங்கா பிரைவேட் லிமிடெட் இனால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்ட்டது.
நீதிபதிகளான மொஹமட் லாபிர் தாஹிர் மற்றும் பி.குமரன் இரத்னம் ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது
இந்த வழக்கில் வாதாட நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி, இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்குமாறு நீதிமன்றில் அனுமதி கோரினார்
சட்டத்தரணியின் கோரிக்கையை ஆராய்ந்த நீதிபதிகள் குழாம் இந்த வழக்கின் பிரதிவாதியாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை குறிப்பிடுவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.