அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் தெரிவானதையடுத்து அமெரிக்க நிறுவனங்களின் பங்குகள் மற்றும் டொலரின் பெறுமதி உயர்வடைந்துள்ளது.
அத்துடன் கிரிப்டோ நாணயமான பிட்கொயினின் பெறுமதியும் உயர்ந்துள்ளது.
எலன் மஸ்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 13 சதவீதம் உயர்ந்துள்ளது.
ஆனால் சீனப் பங்குகள் சநிவடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய வாக்குறுதிகளுக்கமைய வரிக் குறைப்புக்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் பண உட்பாய்ச்சலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.