பியர் உற்பத்திக்காக அதிகளவு அரிசி கொள்வனவு செயயப்படுவதால் சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுவதாக சிறு மற்றும் நடுத்தர ஆலை உரிமையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது
பியர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் கச்சா அரிசி, நெல் அறுவடை மூலம் உற்பத்தி செய்யப்படுவதாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் தலைவர் சேமசிங்க கவலை வெளியிட்டுள்ளார்
‘பியர் உற்பத்தி செய்வதற்கு கச்சா அரிசி தேவை.
பியர் உற்பத்தி செய்வதற்கு தேவையான கச்சா அரிசி நெல் ஊடாக உற்பத்தி செய்யப்படுவதால் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படுகின்றது
பியர் தயாரிப்பதற்கு அதிக சதவீதமான நெல் கொள்வனவு செய்யப்படுவதால் அரிசி உற்பத்திக்கு தேவையான நெல் பற்றாக்குறையாக உள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் சங்கத்தின் தலைவர் சேமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்
தற்போது கட்டுப்பாட்டு விலையில் அரிசியை கொள்வனவு செய்யமுடியவில்லையென சிறிய வர்த்தக நிலையங்களை நடத்துவோர் குற்றம் சாட்டுகின்றனர்.
கடந்த சில வாரங்களாக இலங்கை சந்தையில் அரிசியின் விலை அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்து