பாதுகாப்பு அமைச்சால் அரசியல்வாதிகள் மற்றும் பெரும் வர்த்தகர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் உரிமம் கொண்ட துப்பாக்கிகளை மீள கையளிக்க வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ; 21ஆம் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை மீள கையளிக்குமாறு பாதுகாப்பு அமைச்சு வேண்டுகோள் விடுத்திருந்தது.
உரிமம் பெற்ற துப்பாக்கிகளை மீள கையளிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சு ஒரு மாத கால அவகாசம் வழங்கிய நிலையில் அது இன்றுடன் காலாவதியடைய இருந்தது.
உரிமம் கொண்ட துப்பாக்கி பாவனையாளர்களால் முன்வைக்கப்பட்ட கருத்தினை ஏற்றுக்ககொண்டுள்ள பாதுகாப்பு அமைச்சு காலத்தை அவகாசத்தை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது
கடற்படையின் வெலிசறையில் அமைந்துள்ள அரசாங்கத்தின் வர்த்தக வெடிபொருள் களஞ்சியத்திற்கு இந்த துப்பாக்கிகளை ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.