அநுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட போலி நாணயத் தாள் தயாரிப்பில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேக நபர் நேற்று (04) பிலியந்தலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன
புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நாணயத் தாள்களை அச்சிட்டதாக அண்மையில் தகவல்கள் வெளியான நிலையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்
அரசம் மத்திய வங்கியும் புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்படவில்லையென மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது