இறக்குமதி செய்யப்படும் கிலோ சீனிக்கு ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள விசேட வர்த்தக பண்ட வரியில் எவ்வித மாற்றமும் செய்யாது தொடர்ந்தும் நீடிக்க அநுர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகின்றது
ரணில் அரசினால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் சீனிக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் முதலாம் திகதி முதல் ஒரு வருட காலத்திற்கு விசேட வர்த்தக பண்ட வரி விதிக்கப்பட்டிருந்தது
குறித்;த விரி செலுத்துவதற்கான காலப்பகுதியானது இம்மாதம் அதாவது நவம்பர் முதலாம் திகதி முடிவடைகின்றது
ஆயினும் விலைகளை குறைப்பதாக வாக்குறுதி வழங்கிய அநுர அரசு விசேட வர்த்தக பண்ட வரியை டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
வரி நீடிப்பு பற்றிய வர்த்தமானி அறிவிப்பை நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்
உணவுப் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதாக கூறிய அநுர அரசு தொடர்ந்தும் ரணில் அரசு வச10லித்த வரிகளை அறவிடுவதில் குறியாய் இருப்பது குறிப்பிடத்தக்கது