அநுர அரசாங்கத்தால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
பொய்யான வாக்குறுதிகள் , பொய்யான வேஷங்களை கண்டு மக்கள் ஏமாற கூடாது என யாழ் தேர்தல் மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் யானை சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் டேவிட் நவரட்ணராஜ் தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் நேற்று (4) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளாhர்
தொடர்ந்து கருத்து வெளியிடுகையில்
கடந்த 2005ஆம் ஆண்டு ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகி இருந்தால், தமிழ் மக்கள் அழிவுகளை சந்தித்து இருக்க மாட்டார்கள்
தமிழர் தரப்பு ரணில் நரித்தனம் உடையவர் என நினைக்கின்றார்கள்.
அரசியலில் நரித்தனம் இருப்பது தவறல்ல
நரித்தனமான குண இயல்பு இருந்ததைமையாலே நாட்டை குறுகிய காலத்தில் பொருளாதார வீழ்ச்சியில் இருந்து ரணில் மீட்டதாக டேவிட் நவரட்ணராஜ் சுட்டிக்காட்டியுள்ளாhர்
இப்போதும் ஜேவிபி அரசு ரணில் விக்கிரமசிங்க முன்னெடுத்த பொருளாதார கொள்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து செல்கின்றனர்.
இன்றைக்கு முட்டை விலை , அரிசி விலை , தேங்காய் விலை என்பன அதிகரித்துள்ளது
அநுர ஜனாதிபதி ஆகி ஒரு மாத காலப்பகுதிக்குள் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடனாக பெற்றுள்ளனர்.
தற்போது வழங்கப்படும் கடவு சீட்டு ரணில் விக்கிரமசிங்கவின் சிந்தனையில் உதித்தது.
தமிழ் மக்களின் கலாச்சாரங்கள் அதில் உள்ளடக்கியது கூட ரணில் விக்கிரமசிங்கவே என டேவிட் நவரட்ணராஜ் மேலும் தெரிவித்துள்ளாhர்