தமிழரசுக் கட்சியில் ஆசனம் வழங்கப்படாமையால் கட்சியிலிருந்து வெளியேறிய ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா அண்மையில் ஜனநாயகத் தமிழரசு கூட்டமைப்பை ஆரம்பித்து மாம்பழ சின்னத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் சகிதம் தேர்தில் களமிறங்கியுள்ளாhர்
இந்த கூட்டின் செயலாளராக காணப்படும் அகிலன் முத்துகுமார் கூட சுதந்திரன் பத்திரிகை நிர்வாக இயக்குனராக இருந்து அந்த பத்திரிகையை முற்றுமுழுதாக தனது அரசியல் விளம்பரத்துக்கு உபயோகித்து வருகிறார்.
ஏற்கனவே யாருமே வாசிக்காத அவரது பத்திரிகை;கு விளம்பரக்கட்டணமாக ஒருகோடியை சஜித்திடம் ஜனாதிபதி தேர்தலில் பெற்ற பெருமை அகிலனையே சாரும்
இந் நிலையில் தமிழரசுக் கட்சியின் முன்னாள் இளைஞரணி முக்கியஸ்தர் யாழ்ப்பாணத்தை மையமாக கொண்டு இயங்கும் சமூகம் ஊடகத்தின் இலட்சினை பொறிக்கப்பட்ட குடையை தவராசாவிற்கு பிடிக்கும் போது எடுத்த படமொன்றை சமூக ஊடக பதிவொன்று கசியவிட்டுள்ளது.
புலம்பெயர் தமிழர் என்ற போர்வைக்குள் ஊடகங்களை இயக்குவோர் பணத்தை அள்ளி வீசி இதுபோன்ற கட்சிகளை உடைக்கும் செயற்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்கின்றது.