இலங்கைக்கான இந்தியத் தூதராகத் தமிழர் ஒருவரை நியமிக்க வேண்டும் என த.வெ.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்ட்டுள்ளது
ஈழத் தமிழருக்கான நிரந்தரத் தீர்வைக் கொண்டு வர, பொது வாக்கெடுப்பை நடத்த இந்திய ஒன்றிய மற்றும் தமிழக அரசுகள் வலியுறுத்த வேண்டும் என த.வெ.க. செயற்குழு இன்று கூடிய போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது
கச்சத்தீவு இலங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட பிறகே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், நடுக்கடலில் தொடர்கிறது என த.வெ.க. செயற்குழு குற்றம் சுமத்தியுள்ளனர்
இரு நாடுகளுக்கு இடையிலான குறுகிய கடற்பரப்பில் மீன் பிடித்தல் ஏற்படுத்தும் சிக்கல்களை எவ்வாறு கையாள்வது என்பதை ஐ.நா.வின் கடல்சார் சட்டப் பிரகடனம் தெளிவுபடுத்தியுள்ளது த.வெ.க. செயற்குழுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது