நடப்பு ஆண்டு ஜூன் மாத முடிவில் நாட்டின் மொத்த வெளிநாட்டுக் கடன் 37.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
நடப்பு ஆண்டிற்கான அமைச்சின் மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டு முதலாம் மாதம் முதலாம் திகதி தொடக்கம் கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் மொத்தக் கடன் கொடுப்பனவுகள் 503 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக காணப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
அதில் 275.1 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வாங்கிய அசலை திருப்பிச் செலுத்துவதற்காகவும் எஞ்சிய 227.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வட்டியை திருப்பி செலுத்துவதற்காகவும் ஒதுக்கப்பட்டது என அமைச்சின் அறிக்கையிலிருந்து தெரியவந்துள்ளது
2024 ஜூன் மாத நிதி நிலவரப்படி, செலுத்தப்படாத கடனாக 5.67 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வட்டி 2.53 பில்லியன் டொலர்களாகவும் காணப்படுவதாக நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கை வகுத்தல், திட்டமிடல் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது