தமிழரசுக்கட்சியின் தேர்தல் விஞ்ஞபனம் திருத்தப்பட வேண்டுமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளாhர்
இலங்கைத் தமிழரசுக்கட்சியின் விஞ்ஞாபனம் நேற்று வெளியிடப்பட்ட நிலையிலேயே அதில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை இனக்கலவரம் என இருட்டடிப்பு செய்துள்து தெரியவந்துள்ளது.
சுமந்திரன் வரைந்த விஞ்ஞாபனத்தில் ‘கடந்த காலத்தினை கையாளுதல்’ எனும் ஐந்தாவது பகுதியின் முதலாவது பிரிவான ‘நீதி மற்றும் பொறுப்புக்கூறல்’ தலைப்பின் கீழ் ‘இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும் தமிழ் மக்கள் அனுபவித்த மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்ட மீறல்களுக்கு நீதி என்பது விட்டுக் கொடுப்பற்றதாகவும் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் இன்றியமையாத ஒரு அங்கமாக அமைகிறது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ‘இனக்கலவரத்தின் வரலாறு முழுவதும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளமையானது, தவறானது என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அவ்வாறான சொற் தொடருக்கு பதிலாக இனமுரண்பாட்டின் வரலாறு முழுவதும் என்றோ அல்லது இன அழிப்பின் வரலாறு முழுவதும் என்றோ மாற்றப்பட வேண்டும் என சிறிதரன் தரப்பில் கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபன வரைவில் பங்கேற்ற சுமந்திரன் உள்ளிட்டவர்கள் அதனை மீளத் திருத்துவதற்கு இணக்கம் தெரிவித்த போதும் அது எழுத்தில் மட்டும் மாற்றப்படுமா அல்லது கட்சியில் தற்போது ஆளுமை செலுத்துகின்றவர்களின் மனங்களிலும் மாற்றப்படுமா என பெயர் வெளியிட விரும்பாத கட்சி முக்கியஸத்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்