Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்ஜேவிபி அரசின் முதலாவது வரவு - செலவு திட்டம் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும் - அரசு

ஜேவிபி அரசின் முதலாவது வரவு – செலவு திட்டம் மார்ச் மாதம் சமர்பிக்கப்படும் – அரசு

ஜனாதிபதி அநுரகுமார அரசின் கன்னி வரவு – செலவு திட்டம் மார்ச் மாதத்தில் சமர்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன

சர்வதேச நாணய நிதியத்துடனான வொஷிங்கடன் பேச்சுவார்த்தைகளை, பாராளுமன்ற தேர்தல் நிறைவடைந்தவுடன் புதிய அரசின் உறுதிப்பாட்டுக்காக ஐஎம்எப்பின் மற்றொரு உயர் மட்ட குழுவை கொழும்புக்கு அனுப்புவதற்கு சர்வதேச நாணய நிதியம் திட்டமட்டுள்ளது

அதன் பின்னரே மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் முடிவெடுக்கப்படுமென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது

சர்வதேச நாணய நிதியத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான வொஷிங்டன் பேச்சுவார்த்தை வெற்றியடைந்துள்ளதாக இரு தரப்பும் தெரிவித்துள்ளது

ஆயினும் மூன்றாவது நீட்டிக்கப்பட்ட கடன் வசதியினை பெற முன்னர் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் நிபந்தனை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள் குறித்தும் அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் தொடர்பிலும் வொஷிங்டன் பேச்சுவார்த்தைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாக அறியமுடிகின்றது

அடுத்த வருடம் அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.

இதற்கான நிதி மூலாதாரத்தை எவ்வாறு அடைவது என்பது தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த இல்லை என்பது குறிப்பிடத்தக்கது

அதே போன்று உரம் நிவாரணம் வழங்கியமை மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவை அதிகரித்துள்ளமை தொடர்பிலும் சர்வதேச நாணய நிதியம் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவருகின்றது

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளார்.

 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments