மக்களக்காக உழைக்கின்ற அரசியல் தலைமைகளையே மக்கள் எதிர் வரும் நாடாளுமன்ற தோதலில் தெரிவு செய்வார்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிpவத்துள்ளாhர்
இல்லாத ஒன்றுக்காக கனவு காண்பதை விட நடைமுறைச் சாத்தியமான இலக்குகளை அடைய முயற்சிப்பதே சரியான வழியென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
வடமராட்சி பிரதேசத்தில் தேர்தல் பரப்புரையில் நேற்று (02) ஈடுபட்ட போது முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களை சந்தித்த போது இவ்வாறு தெரிவித்துள்ளார்
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
சமஷ்டி என்ற கோரிக்கையை முன்வைத்து மேடைகளில் முழங்கி தேர்தல் வெற்றிகளை பெற்று நாடாளுமன்றம் சென்றவர்கள் எதனை அடைந்தார்கள் என டக்ளஸ் கேள்வி எழுப்பியுள்ளாhர்
போலித் தேசியம் பேசும் இன்றைய அரசியல் பரப்பில் உள்ளவர்கள் கூறிக்கொண்டிருக்கும் கொள்கைகளை அடைவதற்கான பொறிமுறை அவர்களிடம் இல்லையென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
ஈபிடிபி க்கு குறைந்தது 4 முதல் 5 ஆசனங்கள் தருமாறு மக்களிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே தமது உறுதியான நிலைப்பாடு எனவும் இதுவே இன்று வெற்றிபெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளாhர்
ஆகவே இம்மாதம் 14 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக வீணைச் சின்னத்தை வலுப்படுத்தி பாராளுமன்றம் அனுப்பி வைப்பீர்கள் என நம்புவதாக டக்ளஸ் தெரிவித:துள்ளாhர்