Tuesday, December 24, 2024
Homeசெய்திகள்ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

ஜேவிபி அரசின் பிரதமர் வாக்கு வேட்டைக்காக முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் பிரதேசத்தில் ‘நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு’ எனும் கருப்பொருளில் பொதுக்கூட்டத்தில் பரப்புரையாற்ற பிரதமர் வருகை தரவுள்ளார்.

நாளைமறுதினம் மாலை 4 மணிக்கு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது

புதுக்குடியிருப்பில் உள்ள பேருந்து தரிப்பிடம் நிகழ்விற்கான முக்கிய இடமாகத் தேர்வு செய்யப்பட்டு நிகழ்வை விளம்பரப்படுத்தும் பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பு பிரதேச சபையினர் ஜே.சி.பி மூலம் துப்பரவு செய்யும் பணி விரைவாக நடைபெறுவதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்துள்ளார்

தேசியமக்கள் சக்தியின் பொதுக்கூட்டத்தினை விளம்பரப்படுத்த பதாகைகள் மற்றும் போஸ்டர்கள் கட்டப்பட்டும் ஒட்டப்பட்டும் தேர்தல் விதிமுறைளை அரச கட்சி மீறி செயற்படுவதாக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்காவினுடைய (வுளைட) தேர்தல் கண்காணிப்பாளர்களால் முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் திணைக்களத்தினருக்கு முறைப்பாடு செய்யப்ட்டுள்ளது

முறைப்பாட்டினையடுத்து குறித்த இடத்திலிருந்து பதாதைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments