வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பளை கட்டுவான் சந்தி பகுதியில் இருந்து அச்சுவேலி தோலாக்கட்டி சந்தி வரையிலான வீதி கடந்த 3 தசாப்தத்திற்கு மேல் இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது
பலாலி வீதியில் உள்ள வசாவிளான் சந்தியில் இருந்து அச்சுவேலி தோலாகட்டி சந்தி வரையிலான சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரமான வீதி இன்று (01) திறந்து விடப்பட்டது
எஞ்சிய வீதி இராணுவ இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்குள்ளேயே காணப்படுகிறது.
அதனையும் தேர்தலுக்கு முன் மக்கள் பாவனைக்கு விடுவிக்க வேண்டும் என பிரதேச வாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
தற்போதும் அச்சுவேலி மற்றும் வடமராட்சி பகுதிகளில் வாழும் மக்கள் வலி வடக்கிற்கோ அல்லது தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு செல்வதானால் வல்லை – அராலி வீதியூடாக, வசாவிளான் சந்தியை சென்று பின் அங்கிருந்து, குரும்பசிட்டி ஊடாக சுற்றி , மீண்டும் வல்லை – அராலி வீதியை வநடதடைந்தே அடைந்தே பயணத்தை தொடர வேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் மக்கள் உள்ளனர்.
அதனால் கட்டுவான் சந்திக்கும் வசாவிளான் சந்திக்கும் இடையிலான வல்லை – அராலி வீதியை இராணுவத்தினர் விடுவிக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனர்
அதேபோன்று வசாவிளான் சந்தியில் இருந்து பொன்னாலை – பருத்தித்துறை வீதியும் இராணுவத்தினர் வசமே உள்ளது
அந்த வீதியையும் திறக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை கேட்டுள்ளனர்
அத்துடன் இன்றைய தினம் திறக்கப்பட்ட வீதியின் இரு மருங்கிலும் மக்கள் மீள் குடியேற அனுமதிக்கப்படவில்லை.
வீதியோரமாக உள்ள ஆலயங்களிலும் வழிபாடு செய்யவும் அனுமதிகள் மறுக்கப்பட்டுள்ளன
எனவே வீதிகளையும் விடுவித்து , அப்பகுதியில் மக்கள் மீள் குடியேற அனுமதிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்