மாவீரர் வீரர் வாரத்தின் போதே அனுர அரசின் உண்மை வெளிவருமென முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஜனநாய தமிழ் தேசியக் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்துள்ளார்
வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு- கிழக்கு பகுதியிலும் தமிழ் இளைஞர்கள் அனுரகுமாரவுக்கு பின்னால் அணி திரள்வது போன்ற ஒரு நிலமை இருக்கிறது.
அது உண்மையில் ஒரு மாயை என தெரிவித்த அவர் நாடாளுமன்ற தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெறும் நோக்கில் அவ்வாறு பரப்புரை செய்யப்படுகின்றது என குறிப்பிட்டுள்ளாhர்
எதிர்வரும் 27 ஆம் திகதி இடம்பெறவுள்ள மாவீரர் தினத்தை நினைவு கூருகின்ற போது அநுர அரசின் உண்மை முகம் தெரியவருமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்