யாழ். கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தின் முன்பாக கஜேந்திரனும் அவரது அணியினரும் இன்று (01) களையகற்றி சுத்தம் செய்ய தொடங்கியுள்ளனர்
எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் இன்றிலிருந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்புரவுப் பணிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப்பணியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் இணைந்து செய்து வருகின்றனர்