அரசியல் இலாபத்திற்காக அபிவிருத்தி வேலைத்திட்டங்களை கூட தடைசெய்யும் வக்கிர புத்தியுடையவர் முன்னாள் பாராளுமன்ற பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் என வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளருமான ரிஷாட் பதியுதீன் குற்றம் சுமத்தியுள்ளாhர்
மன்னார், தாராபுரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மேற்கண்டவாறு உரையாற்றியயுள்ளார்
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் 80 பேர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.
வெல்ல முடியாது என தெரிந்து அவர்கள் நாகரீகமாக் ஒதுங்கியுள்ளனர்.
தோற்பது நிட்ச்சயம் என தெரிந்தும் மீறி போட்டியிடும் மஸ்தான் போன்றவர்களை மக்கள் தோற்கடிக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் தெரிவித்துள்ளாhர்
தாராபுரம் மண்ணின் பெருமைக்கே இழுக்கு ஏற்படும் வகையில், மஸ்தானின் செயற்பாடுகள் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்
முஸ்லீம் பிள்ளைகளுக்கென பாடசாலைகளுக்கு கட்டுமான வேலைத்திட்டங்கள் உட்பட பல அபிவிருத்து வேலைகளை கொண்டுவந்த போது, ரணிலின் செயலாளரிடம் சென்று, அதனை தடுத்து நிறுத்தியவர் மஸ்தான் என ரிஷாட் மேலும் தெரிவித்துள்ளார்