தேசிய மக்கள் சக்தி இனவாதப்போக்கை உடையவர்கள் என்பது தமிழ் மக்கள் நன்கு தெரியுமென தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்
பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அரசின் தற்போதைய நிலைப்பாடு சிங்கள மக்களை கண்திறக்கச் செய்யுமென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றது
நேற்று (29) இதுபற்றி அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், தெரிவிக்கையில் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லையென திட்டவட்டமாக அறிவித்துள்ளார்
புதிய பாராளுமன்றத்தில் இச்சட்டம் தொடர்பில் திருத்தங்களை முன்மொழிந்து, அவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்’ எனத் தெரிவித்துள்ளார்.
அரசின் நிலைப்பாடு ; தொடர்பில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், கருத்து வெளியிடுகையில் தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் வழங்கவில்லை.
ஆனால் இன்று வரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தை ஒழிப்போம் என்ற தெளிவான நிலைப்பாட்டை அக் கட்சி கொண்டுள்ளது
தேசிய மக்கள் சக்தி இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து வழுக்கத்தொடங்கிவிட்டார்கள்’ என விசனம் வெளியிட்டிருக்கிறார்.
ஆட்சிபீட மேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதற் எதிர்மாறாகவே செயற்படவதாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களது ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழ்மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருவதாக தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், காணி விடுவிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பன உட்பட எல்லாலற்றிலும் ; கடந்தகால அரசாங்கங்கள் செயற்பட்டதனைப் போலவே தேசிய மக்கள் சக்தியும் செயற்படுமெனவும் இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன்,