திருகோணமலையில் தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்கவே தேர்தலில் சங்குடன் இணைந்து போட்டியிடுவதாக சமஸ்டி தமிழ் அரசு கட்சியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார்.
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்
வடக்கு, கிழக்கில் திருகோணமலையில் மாத்திரமே தமிழர் பிரதிநிதித்துவத்தை பாதுகாக்க இலங்கை தமிழ் அரசு கட்சி தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்..