பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக இல்லையென என ஐநா சபை;, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறவித்துள்ளதனை ஜனாதிபதி அநுர அனுரகுமார மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்க விரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துளள அரசு எதிர்காலத்தில் அவ்வாறான தவறுகள் நடக்காதென தெரிவித்துள்ளதனை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை சர்வதேச சட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ள காரணத்தால் அதனை பின்பற்ற வேண்டிய கடப்பாடு அநுர அரசுக்கு உள்ளதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகளில்; பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக இலங்கை அம்பிகா சற்குணநாதன் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள் துஸ்பிரயோகங்களையும் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய பல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன.
மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை ஜேவிபி அரச ஏன் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்புகின்றது என ஜனாதிபதியால் ; தெரிவிக்க முடியுமா? என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.