யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு பற்றிய கலந்துரையாடல் நேற்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைப்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், கோப்பாய் பிரதேச செயலாளர், ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் விமான நிலையத்திற்கு உரிய பொறுப்பதிகாரிகள் கலந்து கொண்டனர்.
விமான நிலைய உட்கட்டுமான அபிவிருத்தி, விமான நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் வசதிகள்; தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.
விமான நிலையத்தை அண்டிய பிரதேசத்தின் வீதி, வீதி மின் விளக்குகள் தொடர்பிலும் விவாதிக்கப்ட்டது.
1986 ஆம் ஆண்டு விமான நிலையத்திற்காக கையக்கப்படுத்தப்பட்ட பொதுமக்களின் காணிகளுக்கான இன்றைய பெறுமதியை காணி உரிமையாளர்களுக்கு வழங்குவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதாக தெரியவருகின்றது.