பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் எந்த கலந்துரையாடலும் இடம்பெறவில்லை என தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் அது தொடரும் என தெரிவித்தார்.
திசைகாட்டியின் புதிய நாடாளுமன்றம் அமைக்கப்பட்டதன் பின் அது பற்றி சிந்திக்கலாமென அமைச்சர் விஜித ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை முன்வைத்து அதற்கு நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் வழங்குவதன் மூலம் மாத்திரமே மாற்றங்களைச் செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.