ஈஸ்ட்டர் தாக்தலின் பின்னணியில் மிக முக்கிய அதிகாரி உள்ளதாக சனல் 04 காணொளி வெளியிட்டுள்ள நிலையில் குறித்த முக்கிய அதிகாரி யாரென அரசு விசாரனை நடத்த வேண்டுமென உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்
ஈஸ்ட்டர்தாக்குதல் குறித்து நேற்று (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது’
ஈஸ்ட்டர் தாக்குதல்கள் தொடர்பாக வெளியாகியுள்ள விடயங்களுக்கு, அவதூறாக பதில் கூறுவதை விடுத்து அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
குறித்த வீடியோவில் மிக முக்கிய அதிகாரி என குறிப்பிடப்படும் நபர் யாரென்பதனை கண்டறிய அரசாங்கம் குழுவொன்றை நியமிக்க வேண்டும் அவர் மேலும் தெரிவித்துள்ளாhர்
சனல் 4இன் வீடியோவில் புலனாய்வு அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றமை குறிப்பிடததக்கது
சனல் 4இன் வீடியோவில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர் தற்போது அரசாங்கத்தில் உயர் பதவி வகிக்கின்றார் என தெரிவித்துள்ள உதய கம்மன்பில் தேசத்துரோகத்திற்காக அநுர அரசு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்
ராஜபக்ஷ தரப்பினரை ஆட்சில் அமர்த்தும் நோக்கில், அரச புலனாய்வு பிரிவு ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தியதாக செனல்-4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது