விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின்; பிரசார நடவடிக்கையை குழப்பும் நோக்கில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தூண்டுதலில் பருத்தித்துறை பொலிஸார் செயற்பட்டதாக தமிழ் மக்கள் கூட்டணியின் முதன்மை வேட்பாளரும் சட்டத்தரணியுமான வி.மணிவண்ணன் குற்றம் சுமத்தியுள்ளாhர்
பருத்தித்துறை பிரதேசத்pல் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் உள்ளிட்ட 2; கைது செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பருத்தித்துறை நகர பகுதியில்; வரதராஜன் பார்த்தீபன் தலைமையிலான அணியினர் தேர்தல் பிரச்சாரம் செய்த போது பார்த்தீபனும் ஆதரவாளர்களும் பருத்தித்துறை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸாரின் இந்த கைது நடவடிக்கையின் நோக்கம் பிரசாரத்தை குழப்பும் செயலாகவே உள்ளது.
தமிழ் மக்கள் கூட்டணியின் பிரசார நடவடிக்கையை குழப்புமாறு தமிழ் தேசிய மக்கள் விடுதலை முன்னணி பொலிஸாரை ஏவினார்களா என மணிவண்ணன் சந்தேகம் வெளியிட்டுள்ளாhர்