ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் லெபனானில் தாக்குதல் நடத்தி வருகிறது.
முன்னர் ஹிஸ்புல்லா அமைப்பினரின் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
தற்போது ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு உதவி வரும் நிதி மூலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
பெய்ரூட்டில் மிகப்பெரிய அளவில் நிதியை பதுக்கி வைத்திருந்த ரகசிய பதுங்கு குழியை கண்டுபிடித்துள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
அந்த பதுங்கு குழியில் பணம், தங்கம் என மொத்தமாக சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர் அளவிற்கு நிதி இருப்பதாக இராணுவம் அறிவித்துள்ளது
லெபனான் மறுகட்டமைப்பிற்காக இந்த பணம் உதலாம் என இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.