ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை தவிர ஏனையவர்கள் தேசிய இனப்பிரச்சினை என்று ஒன்று இல்லை எனற நிலைப்பாட்டுடன் செயல்பட்டு வருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.
மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை (21) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் போட்டியிடுகின்ற மிக பலமான கூட்டணியாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி எள்ளது
தமிழ் மக்களின் தேசிய இன பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்கிற விடயத்தில் பலமான ஒரு கூட்டணியாக எமது கூட்டணி காணப்படுகின்றது.
தேசிய இனப் பிரச்சினைக்காக பல வருடங்களாக அகிம்சை ரீதியாகவும்,ஜனநாயக ரீதியாகவும் தமிழ் மக்கள் போராடி உள்ளனர்.
தமிழ் மக்களின் தேசிய பிரச்சினையை முன் நிறுத்தி நாங்கள் வடக்கு கிழக்கில் எமது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
தமிழ் மக்கள் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி யை பலப்படுத்த வேண்டிய தேவைப்பாடு மக்களுக்கு உள்ளது.
மக்கள் எங்களுக்கு இரட்டிப்பான ஆதரவு வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது என சிவசக்தி ஆனந்தன் மேலும் தெரிவித்தார்.