யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பொலிஸ் பிரிவு பகுதி பற்றைக்குள் இருந்து சொகுசு காரை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பற்றைக்காட்டில் சொகுசு கார் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் காரை மீட்டுள்ளனர்.
காரில் இருந்து சில ஆவணங்கள் சோதித்த போது அவை போலியானவையென தெரியவந்துள்ளது.
காரின் உரிமையாளரை அறிய காரின் இலக்க தகட்டினை சோதித்த போது அதுவும் போலியானது என தெரிய வந்துள்ளது.
சட்டவிரோத செயலகளுக்கு பயன்படுத்தப்படும் காராக இருக்கலாமென பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை தெல்லிப்பளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.